திருக்குறள்

875.

தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன் இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.

திருக்குறள் 875

தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன் இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.

பொருள்:

தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

மு.வரததாசனார் உரை:

தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க